Ajith : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அஜித்குமார் பற்றி நடிகர் பிர்லா போஸ் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் பேச்சிலராக இருக்கும் சமயத்தில் என்னுடைய நண்பரின் மனைவிக்கு ஹெல்த் இஷ்யூ பிரச்சனை இருந்தது.
உடனே ஆபரேஷன் பண்ணனும் காசு வேண்டும் என அவர் ஒரு பக்கம் கேட்டு ரெடி செய்து கொண்டிருக்க நான் அந்த சமயத்தில் இப்பொழுதுதான் ஷூட்டிங் முடித்துவிட்டு வந்தேன் அஜித் சாரை பார்த்தேன் என சொல்ல உடனே அவர் அஜித் சார் ஹெல்ப் பண்ணுவாருன்னு சொல்லுவாங்க கேட்டுப் பார்ப்போமா கேட்டார்.
நான் சொன்னேன் அவர் உண்மையா இருந்தா உதவி பண்ணுவார். ஆனால் பணமாக கொடுக்க மாட்டார் ட்ரை பண்ணி பார்க்கலாம் என நான் கூறினேன். அடுத்த நாள் டாக்குமெண்ட் எல்லாமே எடுத்துக்கொண்டு அவர் மெரிடியன் வந்தார். அஜித் அவரை பார்த்து என்ன வேண்டும் என கேட்டு உள்ளார்.
உங்களை பார்க்க வந்தேன் என கூறியுள்ளார். அவரை உட்கார வைத்துவிட்டு முதலில் ஜூஸ் சாப்பிடுங்கள் என சொன்னாராம் அவர் வேணாமென மறுத்திருக்கிறார். சாப்பிடுங்கன்னு சொல்ல சாப்பிட்டுவிட்டு விஷயத்தை கூறியிருக்கிறார். எவ்வளவு சார் ஆகும் என கேட்டு இருக்கிறார்.
பிறகு மேனேஜரை கூப்பிட்டு டாக்டர் கிட்ட பேசி எவ்வளவு அமௌண்ட் ஆகும் என தெரிந்து கொண்டு அதை செட்டில் பண்ணி விடுங்க என கூறிவிட்டாராம். உடனே அந்த மனுஷன் அங்கேயே அழுதாராம் பிறகு ரூமுக்கு வந்ததும் என்னிடம் சொல்லி இப்படி ஒரு மனுஷனா கேட்டவுடனேயே உதவி செய்து விட்டார் என கதறி அழுதாராம். இதனை பிர்லா போஸ் தெரிவித்துள்ளார்.