தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இவர் வசூல் மன்னனாக வலம் வருகிறார், அதேபோல் அஜித்தின் திரைப்படம் திரையரங்கில் வந்தால் திரையரங்கமே திருவிழா போல் கோலாகலமாக இருக்கும். இந்தநிலையில் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அஜித் கடந்த வருடத்தில் இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் நேர்கொண்ட பார்வை மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஆகும், இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதேபோல் வலிமை திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல பிரபலங்கள் நோய் விழிப்புணர்வு குறித்து பேசி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், இந்தநிலையில் அஜித் ரசிகர்கள் கொரோனா விழிப்புணர்வுக்காக அஜித் நடித்த காட்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த காட்சியில் அஜீத் கைகளை கழுவும் வீடியோ ஒன்று இடம்பெற்றுள்ளது இதோ அந்த வீடியோ.
#LetsDoHandWashNow #valimai pic.twitter.com/2C1tElrkR9
— Vignesh dhev (@DhevVignesh) March 21, 2020