2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நமீதா நயன்தாரா பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பில்லா, இந்த திரைப்படம் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை கொஞ்சம் மாற்றம் செய்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
அஜித்தின் பில்லா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் மக்களையும் வெகுவாக கவர்ந்து வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்று கூட பில்லா திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் பெறுவாரியான ரசிகர் மக்கள் ஆவலுடன் பார்ப்பார்கள் அந்தளவு பிரபலமான திரைப்படம்.
பில்லா திரைப்படத்தில் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து வைரலானது, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு பில்லா திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டது அதில் அஜித்தின் வருகையை ஏற்று பில்லா திரைப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அதை பலரும் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
அந்த புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.