மக்களுடன் மக்களாக பைக்கில் வலம் வந்த அஜித்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

ajith-bike
ajith-bike

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர், இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் கொரோனா காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் படத்தில் சண்டைக்காட்சிகள் பைக் ரேஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பைக் ரேஸ் காட்சிகளை டெல்லியில் எடுக்க படக்குழு திட்டமிட்டது ஆனால் டெல்லி அரசு கொரோனா பரவலால் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கவில்லை அதனால் அந்த காட்சிகளை எங்கு எடுக்கலாம் என யோசனையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட் வராத நிலையில் ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள், அதுமட்டுமில்லாமல் அஜித்தை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவராததால் ரசிகர்கள் அஜித்தின் பழைய நினைவுகளை வெளிக்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அஜித் மக்களோடு மக்களாக பைக் ஓட்டிய சில புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம் இதுவரை இந்த புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் என தெரிகிறது. அதனால் ரசிகர்கள் அதிகமாக ஷர் செய்து வருகிறார்கள்.