Ajith Bike Ride : அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய திரை படம் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இதனை அடுத்து அஜீத் தன்னுடைய 60 வது படமாக வலிமை படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.
வலிமை திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையில் valimai திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் அஜித் சென்னை திரும்புவதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது தயாரிப்பு நிறுவனம் ஆனால் தன்னுடைய உதவியாளரிடம் டிக்கெட்டை ரத்து செய்ய சொல்லிவிட்டார் அஜித் அதன்பிறகு ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே பயணம் செய்துள்ளார், தம்முடைய உடமைகளை அனைத்தையும் உதவியாளரிடம் எடுத்து வர சொல்லிவிட்டு தனியாளாக 600 கிலோமீட்டர் தூரம் பைக்கிலேயே பயணம் செய்து சென்னை வந்துள்ளார்.
அஜித் திரைப்பட நடிகர் என்பதை தாண்டி அதிக ஆர்வம் பைக் ரேஸ் கார் ரேஸ் ஆகியவற்றில் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இதற்க்கு முன் தல அஜித் அதிக இடங்களுக்கு பைக்கிலேயே பயணம் செய்துள்ளார், மேலும் பல முறை தல அஜித் பைக் ரேஸில் கலந்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதேபோல் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பியவுடன் ஒரே கட்டமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தில் அஜித் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்துள்ளார்.