அஜித்தின் வலிமை திரைப்படம் ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி இரண்டு வருடங்கள் கழித்து நேற்று கோலாகலமாக ரசிகர்களின் ஆரவாரத்துடன் ரிலீஸ் ஆகியது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் வந்ததால் ரசிகர்கள் படம் வெளிவருவதற்கு முன்பாக அன்று முழுவதும் தூங்காமல் வெடி வெடித்தும், கேக்குகளை வெட்டியும், மேளதாளத்துடன் கொண்டாடி அலப்பறை செய்து அசத்தினார்.
ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு முட்டு கட்டை போடாமல் வலிமை படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால் இன்னொரு ட்ரீட்டாக அமைந்துள்ளது படத்தை பார்க்க தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். முதல் நாள் ரசிகர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த திரையரங்கு இரண்டாவது நாளில் பாதியில் மக்களும் வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் படம் மிகப்பெரிய ஒரு கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் தமிழகம் மற்றும் முக்கிய இடங்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல்கள் வெளிவருகின்றன அதன்படி சென்னை ஏரியாவில் மட்டுமே சுமார் 1.82 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் ஓவர் ஆல் 36 கோடி வசூல் செய்ததாகவும் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் வலிமை படம் பாக்ஸ் ஆபீசிஸ் நிலவரமும் கிடைத்துள்ளது. அங்கு முதல் நாளில் மட்டுமே வலிமை திரைப்படம் 4.50 கோடி வசூலித்துள்ளது கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தை விட 20 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் அஜித்தின் சினிமா பயணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது அந்த வகையில் கர்நாடகாவில் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு வலிமை நல்லதொரு வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.