பிரபல நடிகர் பரிசு வாங்கும் விழாவில் கலந்து கொண்ட தல அஜித்..! இதுவரை யாரும் பார்த்திராத அறியா புகைப்படம்..!

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும்  வலம் வருபவர் தான் தல அஜித் அவருடைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானால் போதும் அங்கு தியேட்டரில் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.

அந்த அளவிற்கு இவர் நடிக்கும் திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்து வருகிறது. இந்நிலையில் தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் என்ற திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.

இவ்வாறு இத் திரைப்படமானது சுமார் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த நிலையில் தற்போது இத் திரைப்படமானது அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் சமீபத்தில் கொண்டாடிய தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பண்டிகையில் வலிமை திரைப்படத்தை வெளியிட முடியாததன் காரணமாக தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையில் வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் தல அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்தபோது மோகன்லால் படப்பிடிப்பில் அஜித் விசிட் அடித்த போட்டோ சமீபத்தில் வெளியாகின.

இதனை தொடர்ந்து தற்போது டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களின் திரைப்பட விழாவின் பொழுது தல அஜித் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது பிரசாந்துடன் தல அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளன.

prasanth-1
prasanth-1

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் தல ரசிகர்கள் இதனை டிரண்டாக்கி வருகிறார்கள்.