அந்தப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடு விக்னேஷ் சிவனிடம் கேட்ட அஜித்.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி

ajith

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்த போது அவருக்கு பக்கபலமாக நின்றது அவருடைய ரசிகர்கள் தான் அந்த ரசிகர்களுக்காக சமீப காலமாக நல்ல நல்ல படங்களை கொடுக்க கொடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக இவருடைய படத்தில்  சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் அதிகம் இடம் பெறுகின்றன..

அந்த வகையில் நேர்கொண்ட பார்வை,  வலிமை, துணிவு போன்ற படங்களில் அதிகம் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. வருகின்ற படங்களிலும் இதுபோன்று இருக்கும் என கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு இப்படி நல்ல படங்களை கொடுப்பதையும் தாண்டி தன்னால் முடிந்த உதவிகளையும் மறைமுகமாக செய்து வருகிறார்.

அதேசமயம் தன்னை நாடிவரும் பொதுமக்கள் மற்றும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் அவருக்கு நன்மை யாரும் செய்யவில்லை என்றாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும் ஆனால் ஒரு சிலர் அவரை விமர்சிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அஜித் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இயக்குனர்களுக்கு அதிகம் சிபாரிசு செய்வதில்லை..

இப்படிப்பட்ட அஜித் ஒரே ஒரு சினிமா பிரபலத்திற்கு சமீபத்தில் சிபாரிசு செய்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித்தை பற்றி சமீபத்தில் விக்னேஷ் சிவன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்..அதில் அவர் சொன்னது.. துணிவு படத்திற்கு பிறகு அஜித்திற்கும், விஜய் டிவி அமீருக்கும் நல்ல நட்பு இருந்ததாக கூறப்படுகிறது.

துணிவு படத்தில் ஒரு பாடலுக்கு  அமீர் தான் கோரியோகிராப்  பண்ண வேண்டிய தான் ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் ஒரு படத்திற்கு அமீரை சிபாரிசு செய்து  அஜித் விக்னேஷ் சிவனிடம் பேசினாராம் அமீர் மிகவும் திறமையான பையன் என்றும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடு என்றும் அஜித் ஃபோனில் தன்னிடம் பேசியதாக அந்த பேட்டியில் தெரிவித்தார்.