நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தீபாவளிக்கு கொண்டு வர அதிகம் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இந்த படம் முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் ஷூட்டிங் இதுவரை 32 நாட்கள் வெற்றிகரமாக முடிந்து உள்ளதாக அண்மையில் போனிகபூர் கூறியிருந்தார். இந்தப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா மற்றும் பலர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட வில்லை.
எது எப்படியோ ஷூட்டிங் முன்புறமாக போய்க்கொண்டிருக்கிறது 61வது திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவனுடன் தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். ஒவ்வொரு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் எடையை முடிந்தவரை குறைத்துக் கொண்டு தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஆசைப்படுவது அஜித்தின் ஸ்டைலில்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்க பல்வேறு நடிகர்களுடன் டிப்ஸ் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பிடிக்க போராடும் ஜெயம் ரவியிடம் உடம்பை குறைக்க டிப்ஸ் கேட்டுள்ளார்.ஜெயம் ரவி பேராண்மை திரைப்படத்தின் போது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து நடித்திருந்தார்.
படத்தைப் பார்த்துவிட்டு ஜெயம் ரவிக்கு போன் செய்து எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்பதை சொல்லுங்கள் என கேட்டுள்ளார் அதுவும் விலாவரியாக கேட்டு தெரிந்து கொண்டாராம் அஜித் அதன்பிறகு அஜித்தும் உடல் எடையை குறைத்து படங்களில் நடித்து அசத்தினார் அதை ஜெயம் ரவி பார்த்து மிரண்டு போனாராம் அதை பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.