AK 62 கதையில் அது இருக்கணும் மகிழ் திருமேனியிடம் கேட்டுக் கொண்ட அஜித்.? வெளிவந்த மாஸ் அப்டேட்

ajith
ajith

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் சமீபகாலமாக நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகை  வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டதை  தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை சேர்க்க லைக்கா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து அஜித்..

தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க முனைப்பு காட்டினார். முதலில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை எடுக்க இருந்தது ஆனால் அவர் சொன்ன கதை சிறப்பாக இல்லாததால் லைகா நிறுவனம் அவரை வெளியேற்றியது இதனை அடுத்து மகிழ் திருமேனியை கமிட் செய்துள்ளது அவர் தற்பொழுது படத்திற்கான ஸ்கிரிப்ட்டை வலுவாக எழுதி வருகிறார் .

முடிந்தவுடன் இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்தவுடனேயே சூட்டிங் தொடங்கும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஏகே 62 படம் வெளிவர அதிக வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 திரைப்படம் குறித்து ஒரு தகவல் உலா வருகிறது அதாவது நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக நடிக்கும் படங்களில் சமூக அக்கறை கலந்த மெசேஜை அதிகம் சொல்லப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் எமோஷனல், சென்டிமென்ட் அதிகம் இடம் பெறுகின்றன அதன்படி ஏகே 62 திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் வலுவாக இருந்தாலும்..

கூட  படத்தில் எமோஷனல் மற்றும் செண்டிமெண்ட் சீன்கள் வேண்டும் என அஜித் மகிழ்ச்சிறுமேனியிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம் அதற்கு ஏற்றார் போல மகிழ் திருமேனியும் தனது குழு உடன் சேர்ந்து இந்த இடத்தில் செண்டிமெண்ட் என் வைக்கலாம் என கலந்து யோசித்து வருகின்றனராம் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை .