தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
அவருடன் கைகோர்த்து சமுத்திரக்கனி, யோகி பாபு,, மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்யும் என அஜித் ரசிகர்கள் இப்பொழுதே சொல்லி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் ஏ ஆர் முருகதாசுடன் கைகோர்த்து 2001 ஆம் ஆண்டு தீனா திரை படத்தில் நடித்தார். படம் அப்பொழுது வெளியாகி பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது அதன் பிறகு அஜித் – ஏ ஆர் முருகதாஸ் ஜோடி மிரட்டல் என்ற தலைப்பில் கை கோர்த்தது..
அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசினை நடிக்க வைக்க முடிவு செய்து போட்டோ சூட் எல்லாம் நடத்தியது. ஆனால் சில காரணங்களால் அப்பொழுது அஜித் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது பிறகு கஜினி என்ற தலைப்பில் சூர்யா அசினை வைத்து ஏ ஆர் முருகதாஸ் படத்தை எடுத்து வெற்றி கண்டார்.
இப்படி இருக்கின்ற நிலையில் மிரட்டல் என்ற தலைப்பில் முதலில் அஜித், அசினும் நடிக்க போட்டோ சூட் நடத்திய அந்த பழைய புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகாரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..