சினிமா உலகில் போட்டி இருந்தால்தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகியவர்களை தொடர்ந்து தற்போது அஜித் விஜய் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நடந்து வருகிறது. நிஜ வாழ்க்கையில் அஜித் விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும்..
சினிமா என்று வந்துவிட்டால் படங்களின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இருவரும் இதுவரை பல முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இப்படி இருந்தாலும் அண்மைகாலமாக தனித்தனியாக தான் படத்தை ரிலீஸ் செய்கின்றனர் இருந்தாலும் ரசிகர்கள் யார் படத்தின் வசூல் அதிகம் யார் படம் அதிக நாட்கள் ஓடியது என சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிட்டு சண்டை போட்டுக்கொள்வது வழக்கம்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரசிகர்கள் அஜித் விஜய் இருவரும் இணைந்து நடித்தால் அந்த படம் வரலாற்றில் பேசப்படும் என கூறிவருகின்றனர். ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற பல இயக்குனர்கள் சிறப்பான கதையை உருவாக்கி இருவரையும் நடிக்க வைக்க முயற்சி செய்கின்றனர் ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டதே கிடையாது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு வெகு விரைவிலேயே அஜித் விஜய் கான கதையை உருவாக்கி இருவரையும் சேர்த்து வைத்து ஒரு பிரமாண்ட படத்தை இயக்குவார் என கூறி வந்தார் ஆனால் மற்ற சிலர் இதெல்லாம் சாத்தியமில்லை எனக் கூறிவந்த..
நிலையில் வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் அவர்கள் சமீபத்தில் எனது மகன் வெகு விரைவிலேயே அஜித் விஜய்யை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை எடுப்பார் என கூறி உள்ளார். மேலும் அந்த படம் பான் இந்தியப் படமாக உருவாகும் என தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் குதிக்கின்றனர்.