ஷாலினியால் மாதவன் மீது கடும் கோபத்தில் அஜித்.? அலைபாயுதே படத்தில் நடந்த சுவாரசியமான தகவல்.!

shalini

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர்,நடிகைகளில் ஒரு முக்கியமான ஜோடிகள் தான் அஜித் மற்றும் ஷாலினி இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதல் ஏற்பட்டு பின்பு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அலைபாயுதே திரைப்படத்தில் நடிகை ஷாலினி எதற்காக நடித்தார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக  வேகமாக வைரலாகி வருகிறது. ஆம் ஒரு பிரபலம் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஷாலினி அவர்களை பற்றி பல விஷயங்களை கூறியுள்ளாராம். மேலும் அந்தப் பேட்டியில் தொகுப்பாளர் அந்த பிரபலத்திடம்  அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினி நடித்த பொழுது அஜித் நடிகர் மாதவன் மீது கோபப்பட்டாராம் அது உண்மையா என அந்த பிரபலத்திடம் தொகுப்பாளர் கேட்டாராம்.

அதற்கு பதில் அளித்த அந்த பிரபலம் அஜித் திருமணம் செய்த பிறகு ஷாலினியை அதிகமாக திரைப்படங்களில் நடிக்க கூடாது முக்கியமாக முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகள் நடிக்கவே கூடாது என கூறினாராம். அதற்கு ஏற்றது போல் தனது கணவர் கூறிய அந்த வார்த்தைக்காக ஷாலினி அவர்களும் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவே இல்லையாம். அதன் பின்பு அலைபாயுதே இயக்குனர் ஷாலினி அவர்களிடம் கதை கூறும் பொழுது ஷாலினி எடுத்த உடனே நான் முத்த காட்சியில் மற்றும் நெருக்கமான காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறினாராம்.

இருந்தாலும் இந்த படத்தின் இயக்குனர் ஷாலினி அவர்களை கொஞ்சமாவது அலைபாயுதே திரைப்படத்தில் காதலித்து வருபவர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்களோ என்பதை காட்டினால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறினாராம்.அதற்கு ஷாலினி நான் முதலில் திரைப்படங்களில் நடிக்கவே முடியாது என்று முடிவு செய்து இருந்தேன். அது எனது கணவர் அஜித்தின் திரைப்படமாக இருந்தாலும் சரி ஒரு சின்ன கேமி ரோல் கூட நடிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.

ajith
ajith

நான் ஒரு இல்ல தரசியாக எனது குழந்தைகளுடன் வாழ முடிவெடுத்துள்ளேன் என்று கூறிய பிறகும் அலைபாயுதே இயக்குனர் ரொம்ப இறங்கி வந்து கேட்டதால் அலைபாயுதே திரைப்படத்தில் நடிகை ஷாலினி அவர்கள் நடித்ததாக அந்த பேட்டியில் பிரபலம் கூறிய தகவல் இணையத்தில் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது.