நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. கிளாமர் நடிகைக்கு டோஸ் விட்ட அஜித்!

Ajith

Ajith Angry : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் அஜித் படப்பிடிப்பு தளத்தில் எப்பொழுதும் ஜாலியாகவும் அதேசமயம் பொறுமையாகவும் கையாளக்கூடியவர் அதனாலயோ என்னவோ அவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் செம்ம சந்தோஷமாக படத்தில் நடித்து கொடுத்துவிட்டு போவார்கள்.

மேலும் அஜித்தை பற்றி பாசிட்டிவாகவே பேசுவார்கள் இப்படிப்பட்ட அஜித்  ஒரு நடிகையின் மீது மட்டும் கோபப்பட்டு உள்ளார் அது குறித்து செய்யாறு பாலு விலாவாரியாக கூறியுள்ளார் கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சிறுக்கி சிறுக்கி வந்தா கானா என்ற பாடலுக்கு ரகசியா என்ற ஒரு நடிகை நடனம் ஆக இருப்பார்.

அதன் பிறகு அஜித்தின் அட்டகாசம் படத்தில் தல தீபாவளி பாடலுக்கும் நடனமாடி இருப்பார் இந்த பாடலின் போது முதல் இரண்டு சரணம் முடிந்ததும் பிரேக் கொடுக்கப்பட்டது அனைவரும் ஓய்வெடுத்தனர் ரகசியா அஜித்துக்கு நேராக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் பலரும் அவரிடம் சொல்ல முயன்றனர்.

ragasiya
ragasiya

அஜித்தோ அதெல்லாம் பரவாயில்லை விட்டுவிடுங்கள் என கூறி இருக்கிறார்  மீண்டும் நடனத்தை தொடங்கியுள்ளனர் அந்த சரணம் முடிந்த உடனேயே ரகசியா ஷூட்டிங் பேக்கப் செய்து விடலாமா என கேட்டுள்ளார் இதனால் கோபப்பட்ட அஜித் இயக்குனரை அழைத்து இனி அவர் என்னுடைய படத்தில் நடிக்க கூடாது என கூறிவிட்டாராம்.

அதன் பிறகு அந்தப் பாடல் உருவானது படத்தில் முதல் மூன்று சரணம் மட்டுமே ரகசியா வருவார் அதன் பிறகு அஜித் தான் அந்த பாடலில் ஃபுல்லா ஆடி இருப்பார் என செய்யாறு பாலு கூறியுள்ளார் இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.