ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தும் – விஜய்யும் வெவ்வேறு மாதிரியாக தான் இருப்பார்கள்.! உண்மையை புட்டு புட்டு வைக்கும் பிரபல நடிகை.

ajith - vijay
ajith - vijay

சினிமாவுலகில் உச்சத்தை தொட்ட நடிகர்கள் குறித்து அப்பொழுது செய்திகள் வெளியாகுவது உண்டு குறிப்பாக அவர்களுடன் நடித்த நடிகர் நடிகைகள் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த நடிகர்கள் என்ன செய்தனர் என்பது குறித்து ரகசியத்தை உடைப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் அஜித்-விஜய்.

இவர்கள் இருவரும் சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளனர் இவர்கள் உடன் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறுவது வழக்கம் அந்த வகையில் அஜித்-விஜய் ஆகியவர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஸ்வாதி. அஜித்துடன் வான்மதி, விஜயுடன் தேவா போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.

இந்த இரண்டு படங்களுமே அஜித் விஜய்க்கு திருப்புமுனை படமாக அவரது கேரியரில் அமைந்தது. இந்த நடிகை ஸ்வாதி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : அஜித்தும் விஜயும் நேர்மறையான எண்ணங்களை கொண்டவர்கள்.

அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் சகஜமாக பேசுவார் ஆனால் விஜய் அப்படி கிடையாது யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அஜித் உதவி என்றால் தானாகவே வந்து உதவி செய்வார் அதை வெளியே காட்டிக்க மாட்டார்கள் ஆனால் இதற்கு எதிர்மாறான ஆள் தளபதி விஜய். இவரும் உதவி செய்வார்.

ஆனால் அது வெளியே தெரிந்துவிடுகிறது காரணம் அவரது ரசிகர்கள் தான் அதனை பரப்பி விடுகின்றனர் என கூறினார். எல்லோரிடமும் பணிவாக பேசும் பண்பு அஜித்-விஜய் இருவரிடமும் இருக்கிறது. இருவரும் நல்ல மதிக்கக்கூடிய நண்பர்கள்தான் என கூறினார்.