சிறந்த படைப்பாளி என்ற அந்தஸ்தை உடனடியாக பெற்றுள்ள இயக்குனர் வினோத் தற்போது அஜித்துடன் கை கோர்த்து வலிமை என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மட்டும் இன்று வரையிலும் குறையாமல் வைத்திருக்கிறது படக்குழு. சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்தது.
இதனையடுத்து வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் வலிமை படகுழு இறுதி கட்ட படப்பிடிப்பை எடுக்க ரஷ்யா சென்று உள்ளது .
அதுபோல விஜயின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிவடைந்ததை அடுத்து தற்போது ரஷ்யாவில் சண்டை காட்சிகள் எடுக்க தற்போது அங்கே செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அஜித்தின் வலிமை திரைப்படமும், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதனால் அஜித் விஜய் இருவரும் அங்கு சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தல, தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.