தற்பொழுது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்த வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது பொதுவாக இவர்கள் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இவர்கள் தற்பொழுது எந்த திரைப்படங்களிலும் ஒன்றாக நடிக்கவில்லை என்றாலும் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் விஜய் அவர்கள் இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பதை பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
1995ஆம் ஆண்டு ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம்தான் ராஜாவின் பார்வையிலேயே இத்திரைப்படத்தினை சௌந்தர பாண்டியன் தயாரித்திருந்தார்.
அதோடு இத்திரைப்படத்தில் முதன்முறையாக அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படத்தினை பற்றி இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் அதனை பற்றி தற்போது பார்ப்போம்.
அதாவது இத்திரைப்படத்தின் கதை ரெடியானதும் இந்த திரைப்படத்தில் யாரை ஹீரோக்களாக நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்தோம். அப்போதுதான் அஜித் மற்றும் விஜய் இவர்களிடம் கதையைக் கூறும் பொழுது இவர்கள் இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் திரைப்படத்தில் நடிக்கிறோம் என்று ஒப்புக்கொண்டார்கள்.
அதோடு ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தின் மற்றும் மொத்த பட்ஜெட் மிகவும் குறைவான தான் அதில் ஹீரோக்களுக்கும் பெருசாக சம்பளம் தரவில்லை என்றும் விஜய் முதன்முறையாக வெளி தயாரிப்பாளர் திரைப்படத்தில் நடித்ததால் மிகவும் குறைவான சம்பளம் கொடுத்ததாகவும் அஜித்திற்கு சுத்தமாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.