தமிழ் சினிமாவில் போட்டிகளுக்கு பஞ்சமே இருக்காது அந்த வகையில் ரஜினி கமல், அஜித் விஜய், சூர்யா விக்ரம் எனக் கூறி கொண்டே போகலாம் இவர்களுக்கெல்லாம் தொழில் ரீதியாக போட்டிகள் இருந்தாலும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அதிலும் அஜித் விஜய் படங்களுக்கு எப்பொழுதும் போட்டி நிலவிதான் வருகிறது. என்னதான் தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்களாம்.
அதேபோல் இவர்கள் இருவரும் குடும்பத்துடன் சந்திப்பு நடக்கும் எனவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை வந்தபொழுது அஜித் மற்றும் விஜய் இருவரும் தனியாக ரகசியமாக சந்தித்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இரண்டாவது அலையின் பொழுது தனியாக சந்தித்து சில மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சந்தித்தபோது இவர்களின் உதவியாளர்கள் மற்றும் குடும்பத்தார் யாருமே இல்லை எனவும் கூறப்படுகிறது.
இப்படி இவர்கள் தனியாக சந்தித்து கொண்டது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் விஜய் ஒரு பக்கம் தீவிர அரசியலில் படிப்படியாக இறங்கி வருகிறார் அதேபோல் அஜித் படிப்படியாக அரசியலை விட்டு விலகி செல்கிறார்.
அப்படி இருக்கும் நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் சந்தித்துக் கொண்டது பல யூகங்களை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.