அஜித், விஜய் படம் வேண்டாம்.. “ஆர்யா” படமுன்னா சொல்லுங்க.. ஓடி வந்து நடிக்கிறேன்.! பிரபல நடிகர் பேட்டி.

arya
arya

நடிகர் ஆர்யா வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஆர்யா சத்தி எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள கேப்டன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து சிம்ரன், ஐஸ்வர்ய லட்சுமி, ஹரிஷ், சுரேஷ் சந்திரா, காவியா ஷெட்டி, கோகுல், ஆனந்த் ராஜ், பாரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆர்மி மற்றும் ஏலியன் சம்பந்தப்பட்ட ஒரு கதையை மையப்படுத்தி படம் உருவாகி உள்ளது ஆர்யா இந்த படத்தில் சூப்பராக நடித்துள்ளார் இந்த படத்தின் பிரமோஷன் சமீபத்தில் நடந்தது அதில் நகைச்சுவை நடிகரும் ஹீரோவுமான சந்தானம் கலந்து கொண்டார் அப்பொழுது ஆர்யா குறித்தும் இந்த படம் குறித்தும் அவர் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.

பல இயக்குனர்கள் என்னை டபுள் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு கெஸ்ட் ரோல் கதாபாத்திரங்களுக்கெல்லாம் அழைத்தார்கள் ஆனால் அதை எதையும் நான் ஏற்கவில்லை நான் ஒரு தனி டிராக்கில் நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் ஆர்யா பாஸ் என்கின்ற பாஸ்கரன் 2 அல்லது வேறு ஏதாவது படம் அவரோட நடிக்க அழைத்தால் உடனடியாக வந்து நடிப்பேன் என கூறினார்.

எனக்கு ஆர்யா மேல அவ்வளவு அன்பு எனது நெருங்கிய நண்பர் நல்ல மனிதர் நான் ஒரு நகைச்சுவை நடிகனாக இருக்கும் பொழுது என்னை ஸ்விம்மிங் உடற்பயிற்சி சைக்கிளிங் செய் என்று எனது உயிரை எடுத்துள்ளார் ஆர்யா எது செய்தாலும் ஹீரோ லுக் வேண்டுமென்று என்னை வற்புறுத்தி செய்ய வைத்தார் அவரோடு நடித்த படங்களில் அவருக்கு சரிக்கு சமமாக திரையை பகிர்ந்தவர். என்றும் அவர் மீது எனக்கு இருக்கும் அன்பு மாறாது இது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் முன்னேறி உள்ளார் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பாருங்கள் என கூறினார் மேலும் பேசிய அவர் கேப்டன் படம் ஒரு ஏலியன் பற்றியான ஒரு ஆர்மி கதை என்றும் ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கி உள்ளார்கள் அதனால் அனைவரும் சப்போர்ட் செய்யுங்கள் ரசிகர்கள் ஒரு புதுமையை எதிர்பார்க்கிறார்கள் அவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என கூறினார் மேலும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.