தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசதி வருகின்றனர் அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின.. இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த போனதால் ஆரம்பத்திலேயே படங்களை தூக்கி வைத்துக் கொண்டாடினார்.
போகப்போக குடும்ப ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை அதனால் அனைத்து இடங்களிலும் நல்ல வசூலை அள்ளியது அஜித்தின் துணிவு 260 கோடிக்கு மேல் அள்ளியது. விஜயின் வாரிசு 300 கோடிக்கு மேல் அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் மறுபக்கம் விஜய் லியோ திரைப்படத்தில் இரவு பகல் பார்க்காமல் நடந்து வருகிறார்.
விஜய், அஜித் படத்தில் நடித்தால் தனது மார்க்கெட் உயரும் என பல நடிகர் நடிகைகள் யோசித்து வரும் நிலையில் ஒரு நடிகை மட்டும் அஜித், விஜய் படமே வேண்டாம் என உதிரி தள்ளி இருக்கிறார் அவரை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல நடிகை சாய் பல்லவி தான் இவர் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கொடி கட்டி பறந்தாலும்.. அஜித் விஜய் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
வந்தாலும் அந்த வாய்ப்பை வேண்டாம் என தவிர விடுகிறார். அண்மையில் கூட விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.. ஆனால் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் அதில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார் பிறகு அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தார். அதே போல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ஹரோயின்னாக நடிக்க முதலில் இவரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாம்..
ஆனால் சாய்பல்லவி ஹோம்லியான கேரக்டரில் நடிப்பதில் மட்டுமே எனக்கு ஆர்வம் எனக் கூறியிருக்கிறார் மேலும் அந்த கேரக்டரில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என உறுதியாக நின்றதால் வலிமை படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம். இதை அறிந்த ரசிகர்கள் நீங்க பெரிய பிஸ்தா தான் அஜித், விஜய் படங்களில் நடிக்காமலேயே நீங்கள் இந்த உயரத்தில் இருப்பது பெரிய விஷயம் எனக் கூறி வருகின்றனர்.