ஜெயிலர் படத்தை பார்த்து மிரண்டுப்போன சினிமா பிரபலங்கள்.. போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து சொன்ன அஜித், விஜய்

Rajini

Jailer : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. படத்தில் ரஜினியுடன் இணைந்து விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்தனர்.

மேலும் படத்தில் ஒவ்வொரு சீனும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கி ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது மூன்று நாட்களில் மட்டுமே 241 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு விவரமாக பேசி உள்ளார் அவர் சொன்னது..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்  திரைப்படம் மூன்று நாட்களில் மட்டுமே இந்த ஆண்டு வெளியான விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை பல ஏரியாக்களில் முந்திவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அஜித்தின் துணிவு படம் 200 கோடி வசூல் செய்த இந்த நிலையில் துணிவின் வாழ்நாள் வசூலை ஜெயிலர் திரைப்படம் மூன்றே நாட்களில் முறியடித்து விட்டது என்றும்..

விஜயின் வாரிசு படத்தின் வசூலை சுதந்திர தினத்தை முன்னிட்டு பீட் செய்து விடும் எனவும் கூறினார் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் இயக்குனர் நெல்சனை வாழ்த்தினார் அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் விடாமுயற்சி படத்திற்காக ரெடியாக இருவரும் அஜித் ஜெயிலர்  படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பை பார்த்துவிட்டு மெய் சிலிர்த்து போய் தனது தரப்பு வாழ்த்துகளையும் ஜெயிலர் படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.