நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தின் கலவையான வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல்முறையாக கைகோர்த்து உள்ளார் விஜய். தளபதி 66 படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் உடன் கை கோர்த்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஷாம், மனோபாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையாக இருக்கும் என தெரிய வருகிறது மிக பிரம்மாண்டமான ஒரு வீடு போன்ற செட் அமைக்கப்பட்டு படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தளபதி 66 படத்திற்கு வாரிசு என பெயர் சூட்டியுள்ளது ஆம் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு அசத்தியது.
தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு ஜோராகப் போய்க் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது அதாவது விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படகுழு செட்டில் கேக் வாங்கி விஜய்யை வெட்ட வைத்து அழகு பார்த்தது அதேசமயம் இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அப்போது இருந்ததாக கூறப்படுகிறது பல புகைப்படங்கள் எடுக்கப் பட்டிருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்ததால் வெளியிடக் கூடாது என படக்குழு முடிவாக இருந்ததாம்.
மேலும் விஜய்யும் புகைப்படத்தை வெளியிடக் கூடாது என கூறிவிட்டாராம். விஜய் படத்தின் ஷூட்டிங்கின்போது அந்த கெட்டப்பில் இருந்தால் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே மாட்டார். மறுநாள் ஷூட்டிங் முடிந்தபிறகு கெட்டப் எல்லாத்தையும் கலைத்து விட்டு ரசிகர்களுடனும் சினிமா பிரபலங்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வாராம்
வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கெட்டப்பை கலைத்துவிட்டு ரசிகர்களுடனும் சினிமா பிரபலங்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது இந்த விஷயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.