தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் தல அஜித் மற்றும் சிம்பு இவர்கள் நடிப்பில் உருவான சில படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ்சாக உள்ளதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிக மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா பிரச்சனையினால் 6 மாத கால கட்டத்திற்கு பிறகு திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் ரிலீசானது.
இத்திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்கள் நடித்த எந்த படமும் தியேட்டர்களில் ரிலீஸ்சாகாத காரணத்தினால் ரசிகர்கள் வேதனையில் இருந்து வருகிறார்கள். எனவே திரையரங்க உரிமையாளர்களும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் எப்படியாவது திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதால் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை டிஜிட்டலில் தயார் செய்து ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2007ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படம் நாளை சென்னையில் பல தியேட்டர்களில் ரிலீஸ்சாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சிம்பு மற்றும் ஜோதிகா இருவருமே இணைந்து நடித்திருந்த ஹிட்டான திரைப்படம் மன்மதன் இப்படமும் ரிலீசாக உள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் எப்படியாவது ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்.