நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும் அது மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவர்ந்திழுக்க வில்லை இருப்பினும் ஓரளவு வசூலை அள்ளியது.
இந்த படத்தைத் தொடர்ந்து வலிமை படத்தை இயக்கிய அதே இயக்குனருடன் மீண்டும் ஒருமுறை இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் அஜித்குமார் தனது 61வது திரைப்படத்திற்காக சுமார் 20 இலிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி தற்போது தனது கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார். மேலும் இந்த பட்டத்தில் பல்வேறு கெட்டப்புகளில் அஜித் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றி கரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கப்படுகிறது.
ஆனால் இதற்கு இடையில் நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகள் பக்கம் சுற்றி வருகிறார். அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது. அஜித் வெகு விரைவிலேயே இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் குமார் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. காரணம் ஒரு பார்ட்டி ஒன்றில் அஜித் ஷாலினி மற்றும் பலர் இரவு பார்ட்டியில் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது ஆனால் இந்த புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டது என தெரியவில்லை ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.