தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருமாறி உள்ளவர் ரங்கராஜ் பாண்டே. ஆரம்பத்தில் இவர் பிரபல தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து தற்போது அவர் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார் அந்த வகையில் கடந்தாண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அஜித்துக்கு எதிர் வக்கீலாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் ரங்கராஜ் பாண்டே இதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது.
அஜித் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது வெள்ளித்திரையில் இவருக்கு பட வாய்ப்பு அதிகரித்து வந்தது அந்த வகையில் தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளார் என தற்போது தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை கே ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ளது இப்படத்தின் பெயர் க/பெ ரணசிங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது விஜய் சேதுபதியுடன், ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ரங்கராஜ் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்பொழுது அந்த செய்தி சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.