ஜிம் வொர்க் அவுட் செய்து உடல் எடையை அதிரடியாகக் குறைத்து இளமையான தோற்றத்துடன் போஸ் கொடுத்த அஜித்.! இணையதளத்தில் வைரலாக புகைப்படம்

ajith

தல அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் சில தளர்வுகளுடன் அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பழையபடி தொடங்கியுள்ளது. வலிமை படத்தின் ஷூட்டிங் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது அப்பொழுது கார்த்திகேயா பங்குபெறும் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. அஜித் கலந்து கொள்ளாத அனைத்து காட்சிகளும் எடுத்தார்கள்.

இந்த நிலையில் அஜித் பைக் மற்றும் கார் சேஸிங் காட்சிகளை டெல்லியில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது ஆனால் அங்கு அனுமதி கிடைக்காததால் படத்தை ஹைட்தரபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.

இந்த வலிமை படத்தில் ஹீரோயினாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார், தற்பொழுது படப்பிடிப்பில் இவர் மற்றும் கார்த்திகேயா அஜித் ஆகியவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அதனால் பலத்த பாதுகாப்புடன்  படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தான் பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே இவர் 3 பாடல் மற்றும் ஒரு தீம் மியூசிக்கில் முடித்துவிட்டார், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வளமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அங்கு ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அஜித் செம ஸ்லிம்மாக இருக்கிறார் இதொ அந்த புகைப்படம்.