நடிகர் அஜித் குமார் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது அதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கியது குறிப்பாக 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து அஜீத் தனது 61 மற்றும் 62வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத்தை வளர்த்துவிட்ட ஏ ஆர் முருகதாஸ் உடன் இன்றுவரை அவர் இணையாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தீனா திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து படங்களில் பணியாற்றவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது ரசிகர்கள் தொடர்ந்து எழுதி வைத்து வருகின்றனர்.
ஏ ஆர் முருகதாஸ் அஜீத்துக்காக பார்த்து பார்த்து ஒரு கதையை எழுதி வைத்துள்ளேன் அவர் ஓகே சொன்னால் நிச்சயமாக எடுப்பேன் என கூறி உள்ளார் ஆனால் அஜித்தோ ஏ ஆர் முருகதாஸை மட்டும் தனது படங்களில் சேர்த்துக் கொள்ளாமல் மற்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
அதற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது அதாவது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் படப்பிடிப்பில் ரொம்ப கோபப் படக் கூடிய ஒரு மனிதராம் அதேசமயம் அவர் யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் சற்று கத்தி விடுவாராம் மேலும் அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற்று வசூலில் அடித்து நொறுக்கி விட்டால் படத்தின் கதைகளம் மற்றும் படம் நடிகர் நடிகைகளைப் பற்றி பேசாமல் வசூலையும் சேர்த்து பேசுவது போன்ற சில விழயங்கள் சுத்தமாக நடிகர் அஜித்திற்கு பிடிக்காத ஒன்று.
அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா அஜித் அமைதியான முறையில் இருக்கக்கூடியவர் ஆனால் ஏ ஆர் முருகதாஸ் படபிடிப்பில் கோபட கூடியவர். மேலும் இயக்குனர் முருகதாஸ் படம் வெற்றி பெற்று விட்டால் எல்லாம் பற்றி பேசுவார். குறிப்பாக படத்தின் வசூல் பற்றி பேசுவார். இதுபோன்ற செயல்கள் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காததால் ஏ ஆர் முருகதாஸ் உடன் அஜித் இணையாமல் இருக்கின்றார் என ஒரு தகவல் வெளி வருகிறது.