அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய சிவகார்த்திகேயன்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

sivakaarthikeyan
sivakaarthikeyan

தல அஜித் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் இவர் நேற்று மே 1 உழைப்பாளர் தினத்தன்று தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி உள்ளார் அவருக்கு திரையுலக பிரபலங்கள் நடிகர்கள், நடிகைகள் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக் கூறி வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் அவருடன் நடித்தது பற்றியும் அவருடன் இருந்த நினைவுகள் பற்றியும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக் கூறினார்கள். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் எடுத்துக் கொண்ட ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

அஜித் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஏகன் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தார் ஆனால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் அப்பொழுது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் அந்த பதிவில் கூறியதாவது நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகளை படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துக்கள்.

பேரன்புடன் சிவகார்த்திகேயன் எனக்கூறி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் இந்த பதிவு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.