தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு திரைப்படத்தில் இணைந்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் துணிவு திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு வேறுபட்ட கெட்டப்களில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அதாவது துணிவு திரைப்படத்தில் அஜித் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அஜித் தற்பொழுது ரசிகர்களுக்காக ஒரு அறிவுரை கூறியுள்ளார் அதில் வெறுப்பு உணர்வு பொறாமையோ வேண்டாம் எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு உயர்ந்த இலக்குடன் செயல்பட வேண்டும் என அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்குக் காரணம் விஜயின் வாரிசு திரைப்படம் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளி ஆவதால் ரசிகர்கள் மோதிக்கொள்ளக்கூடாது எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறியுள்ளார்கள்.
துணிவு திரைப்படத்தின் தியரிட்டிகள் ரைட்ஸ் ரெட் ஜாயிண்ட் மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்ட தொகைக்கு கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமில்லாமல் துணிவு திரைப்படத்திற்கு அதிக அளவில் திரையரங்குகள் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதனால் அஜித் ரசிகர்கள் எப்பொழுது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022