நடிகர் அஜித்குமார் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கும் தனது 62 வது திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார் இந்த படத்திற்கு “விடாமுயற்சி” என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலைமையில் அஜித் நடித்த படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்குமார் இப்பொழுது தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் தொடர் தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். அப்படி அஜித்திற்கு கதை சரியில்லை.. இது ஒரு தோல்வி படமாக மாறும் என தெரிந்தும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் ஜி. அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பவன் , ராஜேஷ், மணிவண்ணன், வெங்கட் பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் கதையை படப்பிடிப்புக்கு செல்லும் ஒரு நாளைக்கு முன் தான் அஜித் கேட்டாராம்..’
கதை கேட்டு முடித்தவுடன் கண்டிப்பாக இந்த படம் தோல்வி படம் என கூறினாராம். அப்படி தனக்குத் தெரிந்தும் அஜித் இந்த திரைப்படத்தில் நடித்த காரணம் மறைந்த தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்ததால் அஜித் ஒன்றும் சொல்லாமல் நடித்தாராம். அஜித் சொன்னது போலவே படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக மாறியது.
இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அஜித்தே கிடையாது நடிகர் மாதவன் தான் என இயக்குனர் லிங்குசாமி கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் இந்த தகவல் தற்பொழுது நடிகர் அஜித் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல வைரலாகி வருகிறது.