Ajith : சினிமா உலகில் ஆண் இயக்குனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன ஆனால் பெண் இயக்குனர்களோ விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கின்றனர்.. அதிலும் ஒரு பெண் இயக்குனர் தொட்ட எல்லா படத்திலும் வெற்றியை கண்டு வருபவர். குறிப்பாக சுதா கொங்கரா தான்.
இவர் முன்னணி இயக்குனர் மணிரத்தினத்திடம் ஏழு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்த பின் 2010ல் துரோகி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.. தொடர்ந்து இவர் இயக்கிய இறுதி சுற்று, சுரரைப் போற்று ஆகிய இரு படங்களுமே இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது அதிலும் குறிப்பாக சூரரை போற்று திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்றது.
இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா மற்றும் ஹீரோயினாக அபர்ணா பால முரளி போன்றோர் நடித்திருந்தனர் மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தற்பொழுது சுதா கொங்கரா சூரரை போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
அவரது அடுத்த பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.. இந்த நேரத்தில் அண்மையில் சுதா கொங்கரா வெங்கட் பிரபு நெல்சன் போன்றோருடன் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சுதா கொங்கரா வெங்கட் பிரபுவிடம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா..
அஜித்தின் மங்காத்தா படம் வெளிவந்த போது ரெண்டு பக்கத்துக்கு உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன், எப்படி இந்த படம் உங்களால பண்ண முடிந்தது, நீங்க சொல்ல அஜித் நடிக்க அவ்வளவு சூப்பரா இருந்தது.. என வெங்கட் பிரபுவை பாராட்டி இருக்கிறார்.. இந்த வீடியோவை தற்போது அஜித் ரசிகர்கள் அதிகம் வைரல் ஆக்கி வருகின்றனர்.