தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், தல அஜித்துடன் நடிக்க பல பிரபலங்கள் ஆசைப்படுவார்கள், அதேபோல் அஜித்திற்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது, அஜித்தின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.
தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளனர் படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் தல அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலாக இருந்துள்ளார், அப்பொழுது சில விளம்பர திரைப்படங்களிலும் நடித்து சம்பாதித்து உள்ளார், அந்த காசை வைத்துக்கொண்டு பைக் ரேஸில் கலந்து கொள்வது ஆகியவற்றை செய்து வந்தார். இப்படியிருக்க ஆரம்ப கட்டத்தில் அஜித் நடித்த விளம்பர படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுபோல் விளம்பர திரைப்படத்தில் அஜித் ஆரம்ப காலத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் அதன்பிறகு எந்த ஒரு விளம்பரப் படத்திலும் நடித்ததில்லை.
இதோ அந்த வீடியோ