அரைத்த மாவையே அரைத்து அஜித்திடம் கதை சொல்லப் போகும் பிரபல இயக்குனர்.? பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப் போகும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.?

atlee
atlee

தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் இயக்குனர் அட்லி இவர் தற்பொழுது பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அட்லி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வருகிறார் ஒரு சில திரைப்படங்களை ரசிகர்களுக்கு பிடித்தது போல் படத்தை இயக்கி முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தார். அந்த வகையில் ஆர்யா நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதற்கு முன்பு சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து அட்லி தெறி மெர்சல் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். தற்பொழுது இவர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் என்னதான் விஜய்க்கு மூன்று ஹிட் திரைப்படங்களை கொடுத்தாலும் அந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம்  விமர்சனங்களை சந்தித்தது.

அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய முதல் திரைப்படமும் ரசிகர்களிடம் விமர்சனங்களை சந்தித்தது ஏனென்றால் இவர் திரைப்படம் முழுக்க முழுக்க வேறொரு திரைப்படத்தின் காப்பி என பலரும் கூறி வந்த நிலையில் விஜய்யை வைத்து எடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்களும் வேறொரு திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் பல இருந்தன என பலரும் விமர்சனம் செய்தார்கள்.

அதற்கு அட்லி அவர்கள் ஸ்வரங்கள் ஏழு தான் அதனை எப்படி வேணாலும் மாற்றி மாற்றி அமைக்கலாம் அது போல் தான் கதை எல்லா திரைப்படத்திலும் ஒரே மாதிரி தான் இருக்கும் அதனை மாற்றி தான் எடுத்துள்ளோம் என வெளிப்படையாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அட்லி அடுத்ததாக யார் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை அட்லீ இயக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் நேற்று சமூக வலைதளங்களில் அட்லி அடுத்ததாக அஜித்தின் 63வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.  அதுமட்டுமில்லாமல் அட்லியின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் இதுவரை தமிழ் திரை உலகிலேயே மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக இந்த திரைப்படம் அமையும் எனவும் கூறப்படுகிறது.

சன் பிக்ச்சர் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நாயகனாக அஜித் அல்லது விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.