அஜித்திற்கு எழுதிய பாடல் வரிகளை வைத்து அஜித்திற்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்.! ஆட்டம் இனிதான் ஆரம்பம்

vignesh-shivan
vignesh-shivan

அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த  திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது இந்த நிலையில் அஜீத் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்தையும் போனி கபூர் அவர்கள் தான் தயாரிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான அது மட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த திரைப்படத்தில் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார்.

அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்  இந்த மிகச் சிறந்த வாய்ப்பை கொடுத்த அஜித் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் 62 திரைப்படத்தில் பணிபுரிவது மிகவும் பெருமைக்கு உரியது எனவும் இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அனிருத் அவர்களை மீண்டும் இசையரசன் லைக்கா நிறுவனத்துடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியைத்  தந்துள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆதாரு ஆதாரு என்ற பாடலை எழுதியது விக்னேஷ் சிவன் தான் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் என்ற வரியை தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு.