தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் இந்த திரைப்படத்தை போனிகபூர் அவர்கள்தான் தயாரிக்கிறார் அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இதுவரை 30 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அஜித் 61 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்திற்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் வீரம், சார்பட்டா பரம்பரை கேஜிஎப் இரண்டாவது பாகம் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரபல நடிகர் ஜான் கோக்கேன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இவர் 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய வீரம் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.