தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் ஷாம் சமீப காலங்களாக முக்கிய கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார். இவர் 2000ஆம் ஆண்டு விஜய்-ஜோதிகா கூட்டணியில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து அன்பே வா, லேசா லேசா, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே என தற்போது வரையிலும் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் சமீப காலங்களாக திரைப்படங்களில் ஹீரோவாக மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் ஷாம் சமீப பேட்டி ஒன்றில் அஜித்தால் தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் வியப்பிலிருந்து வருகிறார்கள். அதாவது ஷாம் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருந்தார்.
இவருக்கு துணிவு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் எனவே லோகேஷ் கனகராஜ் போன் செய்து ஷாமிடம் பேசி கேள்வி கூறிய நிலையில் அதே நேரத்தில் வாரிசு திரைப்படத்திலும் நடிக்க இருந்ததால் அவரால் துணிவு திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய் உள்ளது. இதனை அடுத்து இதுவரையிலும் ஷாம் அஜித்துடன் இணைந்து நடித்தது இல்லை என்றும் ஆனால் அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் எனவும் கூறியிருக்கிறார்.
அதாவது அஜித் உடைய மகள் படிக்கும் அதே ஸ்கூலில் தான் ஷாமின் மகள் படிக்கிறாராம் எனவே சில நேரங்களில் மீட்டிங்கின் பொழுது அஜித்தும் ஷாமும் பேசிக் கொள்வார்களாம் அடிக்கடி மீட்டிங்கில் ஷாமின் மனைவிதான் போவாராம் அதே போல் அஜித் தான் பல மீட்டிங்கில் கலந்து கொள்வாராம் எனவே அஜித் சாரே மீட்டிங்கில் தன்னுடைய குழந்தைகளுக்காக கலந்து கொள்கிறார் உங்களுக்கு அதற்கு நேரம் இல்லையா என கூறி சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருப்பதாக ஷாம் கூறியிருக்கிறார் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.