சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை மற்றும் விஸ்வாசம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன அதுமட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்பொழுது அஜித் அவர்கள் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தை ஹச். வினோத் அவர்கள் இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் இப்படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் படத்தின் ஷூட்டிங் தள்ளிபோய் உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மனவருத்தில் இருந்து வருகின்றனர். சினிமாவில் இருந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வருபவார்கள் வெகு சிலரே அந்தவைகயில் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர்களில் தல அஜித்தும் ஒருவர். மக்களுக்காக ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை பல உதவிகளை செய்து வருகிறார். அதுபோல தன்னுடன் நடித்துவரும் சக நடிகர்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.
தற்பொழுது பில்லா 2 படத்தில் அஜித் அவர்களுடன் சேர்ந்து நடித்த கார்த்திக் அவர்கள் அஜித்திடம் உதவி பண்ணுமாறு கேட்டுள்ளார்.அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இந்த வீடியோவில் கார்த்திக் கண்ணீருடன் ராகவா லாரன்ஸ் அல்லது அஜித் சார் அவர்கள் யாராவது உதவுங்கள் என கண்ணீருடன் கதறி அழுது கேட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
Cc @SureshChandraa @richardrishi https://t.co/alXVzfqDDE
— Kokki Kumaru 😉 (@KokkiOfficial) April 21, 2020