நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையின் புதிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடிகர் அஜித்துடன் இணைந்து விவேகம், விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா, தனுசுடன் மாரி, ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி உள்ளிட்ட தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக ‘ஹே சினாமிகா’ என்ற படம் வெளியானது தற்போது இவர் நடிகர் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் நடிகை காஜல் அகர்வால் நடித்த முடித்துள்ள கோஸ்ட் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இவ்வாறு முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் கௌதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய திருமணம் மும்பையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் இரு வீட்டார் சமதத்துடன் நடைபெற்றது. இவ்வாறு காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்சிலு தம்பதியினர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அந்த குழந்தைக்கு நெய்ல் என பெயர் வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த குழந்தை பிறந்து எட்டு மாதம் கடந்துள்ள நிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவ்வாறு இதனை வெளியிட்ட இவர் தனது மகன் மிகவும் வேகமாக வளர்ந்து விட்டான் என தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..