90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ரஜினி கமல் போன்ற பல ஜாம்பவான்கள் இருந்தாலும் தனக்கான தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர் பட்டாளத்தை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன்.
இவரைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்ப்பு கிடைக்காததால் தற்போது சினிமாவில் பட வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு பக்கமிருக்க அர்ஜுனின் தங்கை மகனான சிரஞ்சீவி சர்ஜா தொடர்ந்து அவரது தம்பி துருவாவும் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இவர் சினிமா உலகில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து கொடுத்துள்ளார் அந்தவகையில் தமிழில் இவர் செம திமிரு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அந்த திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்திற்காக துருவாவுக்கு நடிப்பு மற்றும் ஆக்சன் போன்றவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளார் அர்ஜுன்.
துருவா அர்ஜுனுக்கு உறவுக்கார ஒரு மகனாக இருந்தாலும் மகன் போலவே பார்த்து வருகிறார்.
ஐஸ்வர்யாவுக்கும் துருவா முறைப்பையன் என்றாலும் சினிமாவில் இருவரும் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என அர்ஜுன் விரும்பினால் அதனை தன் மகளிடம் கூறினார் அதற்கு ஐஸ்வர்யா எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல்கோபம் கொண்டார்.
துருவா வை நான் சகோதரனாக தான் பார்த்து பழகி வருகிறேன் நான் எப்படி அவருடன் சேர்ந்து நடிக்க முடியும் என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.