கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடிக்கவுள்ள செல்வராகவன்.! படத்தை இயக்க போவது யார் தெரியுமா.?

selvaragavan
selvaragavan

செல்வராகவன் இயக்குனராக சினிமாவுலகில் தன்னை தலை காட்டிக்கொண்டாலும் சமீபகாலமாக நடிக்கவும் ஆயுதமாக்கி உள்ளார். இவர் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம் படத்தில் நடித்தார் ஆனால் இந்த படம் இதுவரை வெளிவரவில்லை அதற்குள் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி  விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட்.

படத்தில் இயக்குனர் செல்வராகவன் இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறப்பான படங்களில் செல்வராகவன் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் புதிதாக ஒரு படத்தை எடுக்கிறார்.

அந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள்  படத்தில் நடிக்கின்றனர் இந்த படத்தில் தற்போது இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகராக தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பல்வேறு படங்களை இயக்கவும் ரெடியாக இருக்கிறார் முதலாவதாக தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க இருக்கிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் படங்களில் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும்   தொடர்ந்து பணியாற்றி வருவதால் செல்வராகவனின் மார்க்கெட் தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இவர் நடித்துள்ள திரைப்படங்கள் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்குமா ஆனால் செல்வராகவனின் சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.