இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன அது மட்டுமில்லாமல் சமீபத்தில் தனுஷ் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அன்றிலிருந்து இன்றுவரை வலம் வரும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் இவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து வந்தார்கள் தற்பொழுது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இருவரும் எந்த பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாளும் ஒன்றாக தான் வருவார்கள் அந்த அளவு மிகவும் அந்நியோன்யமாக இருந்தார்கள். கிட்டத்தட்ட 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திடீரென விரிசல் ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது தனுஷ் திடீரென தங்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்துள்ளார்.
தனுஷ் அவர்கள் தான் வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் இருவரும் நல்ல தம்பதி ஆகவும் நல்ல பெற்றோர் ஆகவும் வாழ்ந்து வந்தோம் ஆனால் தற்போது இருவரும் சேர்ந்து பிரிந்து விடலாம் என முடிவு எடுத்துள்ளோம் என தனுஷ் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தார் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் இருவரும் உங்களுடைய பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழக் கூடாது என அறிவுரை கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கூறிவருகிறார்கள் இந்த வயதில் இப்படி ஒரு கஷ்டத்தை நீங்கள் அனுபவிக்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். தனுஷ் அவர்கள் தங்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்ததும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள்தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை திடீர் என மாற்றியுள்ளார்.
தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினியுடன் சிறுவயதாக இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஐஸ்வர்யாவுடன் சௌந்தர்யாவும் ரஜினியுடன் இருக்கிறார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022