மாடு மாதிரி வேலை செய்தும் குறைவான சம்பளம் தான் ஐஸ்வர்யா அம்மா கொடுத்தாங்க.! இன்னும் கொஞ்ச நாள் இருந்தா நிறைய திருடி இருப்பேன் என தெனாவட்டாக பதில் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு பணிப்பெண்..

aishwariya-rajini
aishwariya-rajini

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் மாடு மாரி வேலை செய்தாலும் குறைவான சம்பளம் கொடுத்ததன் காரணத்தினால் தான் திருட ஆரம்பித்ததாக பணிப்பெண் குடியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் லால் சலாம் திரைப்படத்தின் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

மேலும் ரஜினி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல் மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் தன் வீட்டு லாக்கரையில் இருந்த தங்கம் மற்றும் வைர, வெள்ளி நகைகள் காணாமல் போய்விட்டதாக போலீசில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்திருந்தார்.

எனவே தங்களின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்த நிலையில் பிறகு போலீசார்கள் விசாரணை நடத்தினர் அதில் கடந்த நான்கு ஆண்டுகளாக கார் ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து சிறுக சிறுக லாக்கரில் இருந்து நகைகளை திருடியது தெரியவந்துள்ளது.

மேலும் அப்படி திருடிய நகைகளை சென்னை மயிலாப்பூரில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் அந்த பணத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் தன்னுடைய கணவரிடம் இந்த வீடியோ ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடையது எனவும் நான் அவருடைய பினாமி எனவும் கூறியுள்ளார்.

எனவே வெளி உலகத்திற்காக இது நம்ம வீடு எனவும் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடையது என தெரிந்தால் பிரச்சினை வரும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஈஸ்வரி கூறியது, ஐஸ்வர்யா அம்மா தனக்கு 30,000 ரூபாய் தான் சம்பளம் கொடுத்தார்கள் அதை வைத்து தான் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் இதனால் தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் திருட்டு வேலைகளை செய்ததாகவும் அதை அவர்கள் கவனிக்காத காரணத்தினால் பெரிய திருட்டையில் இறங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் லாக்கர் சாவி தன்னிடம் இருந்ததால் வீட்டில் யாரும் இல்லாத பொழுது நகைகளை திருடி விட்டதாகவும் கூறிய ஈஸ்வரி பிறகு இன்னும் கொஞ்ச நாள் இருந்தா இன்னும் நிறைய திருடி இருப்பேன் என தெனாவட்டாக பதில் கூறிய நிலையில் நகைக்கடையில் 100 பவுனுக்கு மேல் நகைகள் மற்றும் வைர நகைகள், வெள்ளி பாத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.