தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் அந்த திருமணம் தற்போது விவாகரத்தில் வந்து முடிந்து விட்டது.
என்னதான் இவருடைய திருமணம் விவாகரத்து வரை சென்றாலும் இவர்கள் இருவருமே தங்களுடைய சொந்த வாழ்க்கை மற்றும் குழந்தைகளை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் தாங்கள் தங்களுடைய பணியில் மிகத் தீவிரமாக இறங்கி விட்டார்கள். அந்த வகையில் ரஜினி மட்டுமே நடுவில் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா பணிபுரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிகை ரீமாசன்னுக்கு நடிகை ஐஸ்வர்யா தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ஆக தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு திரைப்படத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தியேட்டரில் அவர் டப்பிங் பேசும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகபோக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறுகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகாக டப்பிங் தியேட்டரில் தமிழ் திரைப்படத்திற்காக டப்பிங் குரல் கொடுத்துள்ளேன் இவ்வாறு பெற்ற அனுபவம் எனக்கு தண்ணீரில் மீன்கள் துள்ளுவது போல் சந்தோஷமாக இருக்கிறது என்று பதில் கூறி உள்ளார்.