ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முக்கிய பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.! பார்த்து குழம்பி போயிருக்கும் ரசிகர்கள்.

aishwarya
aishwarya

சினிமா உலகில்  வெற்றியை நோக்கி ஓட தனது திறமையை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் அப்படி சினிமாவில் அதிக ஆர்வமாக இருந்து வருவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்பொழுது பல திரைப்படங்கள் எடுத்து உள்ளார். அவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து உள்ளன.

அந்த வகையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் தனுஷ் அவர்களை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கிய அறிமுகமான முதல் படமே அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அளவிற்கு படத்தின் கதைகளம் மற்றும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அதன்பின் 2017 ஆம் ஆண்டு சினிமா வீரன் என்ற டாக்குமெண்டரியையும் உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதோடு மட்டுமல்லாமல் சினிமா உலகில் பாடகராகவும் நட்பே நட்பே இந்த பாடலை விசில் படத்திற்காகவும் உன் மேல ஆசைதான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடலையும் அவர் பாடி உள்ளார்.

இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்கள் அவருக்கும் இரு மகன்கள் உள்ளனர் 18 வருடங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர்கள் சில பிரச்சனைகள் காரணமாக தற்போது பிரிந்து உள்ளனர். விவாகரத்து பெற்ற பிறகு அந்த கவலையில் உட்காராமல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தொடர்ந்து சினிமா பக்கம் பயணித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் அதோடு மட்டுமல்லாமல் பல இசையமைப்பாளர்களை சந்தித்து சத்தமே இல்லாமல் தனது படத்திற்கான பாடல்களை வாங்கி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசைக்கு பெயர்போன இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்து போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

aishwarya
aishwarya
aishwarya
aishwarya