தன் கணவர் தனுசுக்காக அந்த நடிகரிடம் டீல் செய்த ஐஸ்வர்யா ரஜினி.! கணவன் மனைவி பிரிந்ததில் தலைவனுக்கு தான் கொண்டாட்டம் போல ..?

dhanush-aishwarya
dhanush-aishwarya

நடிகராக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து முன்னணி நடிகராக உயர்ந்த பின்பு தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பல அவதாரம் எடுத்தவர் நடிகர் தனுஷ். இயக்குனராக தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே வெற்றி வாகை சூடியவர். அதுமட்டுமல்லாமல் காலம் காலமாக வேஸ்டி சட்டை போட்டு வந்து சினிமாவில் மிரட்டிய ராஜ்கிரனை ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் ஸ்டைலாக காண்பித்தவர்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் இயக்கிய பா பாண்டி திரைப்படத்தை பார்த்த பலரும் இது தனுசுக்கு முதல் திரைப்படம் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மிகவும் கச்சிதமாக இயக்கியிருந்தார் அந்த அளவு திரைப்படம் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக புதிய திரைப்படத்தை இயக்க ரெடியாகிவிட்டார். தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பது உறுதி ஆகியுள்ளது அதுமட்டுமில்லாமல் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. விஷ்ணு விஷால் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் புதிய திரைப்படமான லால் சலாம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்  விஷ்ணு விஷால். ஒரே நேரத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஒரே சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது என ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ்  நிறுவனத்துடன் விஷ்ணு விஷால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளார். ஆனால் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தனுஷ் கைவிட்டார். ஆனால் அப்பொழுது போடப்பட்ட டீலுக்காக தான் விஷ்ணு விஷாலை தான் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் டீலிங்கை மனதில் வைத்துக் கொண்டுதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் விஷ்ணு விஷாலுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருப்பார் என விவரம் தெரிந்தவர்கள் கூறி வருகிறார்கள். எது எப்படியோ ஆனால் விஷ்ணு விஷாலுக்கு ஜாக்பாட் தான் ஏனென்றால் தனுஷ் இயக்கும் திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருவதால் இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் ஹிட் அடித்தாலும்  விஷ்ணு விஷாலுக்கு ஜாக்பாட் தான்.

அதனால் இரண்டு திரைப்படமும் விஷ்ணு விஷாலின் கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் பா பாண்டி திரைப்படத்தை தொடர்ந்து  ருத்ரன் என்ற திரைப்படத்தை இயக்க முடிவு செய்தார் அந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, நாகார்ஜுனா ,அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது அதனால்தான் ருத்ரன் திரைப்படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யாவை தான் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தனுஷ் தற்பொழுது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது அதேபோல் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த இரண்டு திரைப்படமும் முடிந்த பிறகு தான் இயக்கும் புதிய திரைப்படத்தை துவங்க இருக்கிறார் தனுஷ்.