தனுஷை விட்டு பிரிந்த பிறகு வெறித்தனத்தை காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! வைரலாகும் வீடியோ

aishwarya rajini
aishwarya rajini

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரஜினியின் மகள் ஆவார். இவர் நடிகர் தனுஷ் அவர்களை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார் தனுஷின் புகழ் உச்சத்தில் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் படத்தில் நடிப்பதை தாண்டி படத்தை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்து விட்டு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் திடீரென விவாகரத்து செய்தியை அறிவித்து சினிமா உலகினரை அதிர்ச்சியில் அழுத்தினார்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய ஆல்பத்தை வெளியிட்டார் அதற்கு தனுஷ் அவர்கள் வாழ்த்தும் கூறினார் அதைப்பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தார் இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தாலும் இணைந்து வாழவில்லை என்ற வருத்தம் அனைவரிடமும் இருந்து வருகிறது. அதேபோல் தனுஷ் விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில்   இருவரும் மீண்டும் இணைவார்கள் என பலரும் கூறி வந்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என தற்போது தகவல் கிடைத்துள்ளது ஏனென்றால் இருவரும் விவாகரத்துக்கு பிறகு அவரவர்கள் வேலையில் மும்முரமாக இருக்கிறார் அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பத்தை வெளியிட்ட பிறகு ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் கிடைத்தது.

அதேபோல் இருவரும் தங்களுடைய வேலைகள் இருந்தாலும் தங்களுடைய மகன்களுடன் நேரத்தை செலவு செய்வதை   வழக்கமாக வைத்துள்ளார்கள்.  இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது உடற்பயிற்சி செய்து அதன் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அப்படியிருக்கும் நிலையில் தற்பொழுது வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம்   வைரலாகி வருகிறது.