பிரிவிற்கு பிறகு முதன்முறையாக ஐஸ்வர்யா ரஜினியுடன் பேசிய தனுஷ்.! இதோ ட்விட்டர் உரையாடல்

dhanush aishwarya
dhanush aishwarya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.  யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், இந்த நிலையில் பதினெட்டு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக ஒரு அதிர்ச்சியை கொடுத்தார்கள். இவர்கள் இவ்வாறு அறிவித்தது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆகி ஓரிரு வருடங்களில் விவாகரத்து செய்தால் கூட பரவாயில்லை 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு இரண்டு மகன்கள் இருக்கும் இந்த நேரத்தில் இது தேவையா உங்களுடைய மகன்களுக்காக நீங்கள் சேர்ந்து வாழவேண்டும் என பலரும் அறிவுரை கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் பலரும் அறிவுரை கூறியதால் இருவரும் விவாகரத்து வேண்டாமென ஒரு முடிவில் இருக்கிறார்கள் ஆனால் ஒன்றாக சேர்ந்து வாழப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இருவரும் பிரிந்த நிலையில் அவர் அவர்கள் தங்களுடைய வேலைகளை கவனமாக செய்து வருகிறார்கள்.

தனுஷ் வாத்தி, செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் அதேபோல் ஐஸ்வர்யா ரஜினி அவர்களும் இயக்குனராக சினிமாவில் உருவெடுத்து விட்டார். இந்த நிலையில் 9 வருடங்களுக்குப் பிறகு இவர் பயணி என்ற இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பயணியை ஆல்பம் வெளியிடப்பட்டது அதற்கு பல்வேறு பிரபலங்களும் ட்விட்டரில் வாழ்த்து கூறி வந்தார்கள்.

இதில் ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் ஆல்பத்திற்கு வாழ்த்துக் கூறிய ட்விட் ஒன்றை அறிவித்துள்ளார் அந்த ட்விட்டரில் தோழி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள் கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள்  கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

என்னது தோழியா அப்ப மனைவி இல்லையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேபோல் தனுஷின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஐஸ்வர்யா அவரது வாழ்த்து தெய்வீகம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி பேசிக் கொண்டுள்ளது ரசிகர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.