சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி திரை உலகில் இதுவரை வை ராஜா வை, 3 ஆகிய இரண்டு படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மூன்றாவதாக விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியவர்களுடன் இணைந்து லால் சலாம் என்னும் படத்தை எடுக்க இருகிறார்.
இந்த படம் மிகப்பெரிய ஒரு கிரிக்கெட் படமாக உருவாக இருக்கிறது. படத்தில் ரஜினி கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரையுலகில் ஜொலிக்கும் இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருவரும் 14 வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்பொழுது பிரிந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் கொஞ்ச காலம் அப்பா கொஞ்ச காலம் அம்மா என வாழ்ந்து வருகின்றனர் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ரஜினி பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது ஐஸ்வர்யா ரஜினி நாம் நினைப்பது போல ஒரு இயக்குனர் மட்டும் கிடையாது அவர் ஒரு படகரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆவதற்கு முன்பாக ஒரு சில படங்களில் பாடலும் பாடி இருக்கிறார் அந்த வகையில் விசில் படத்தில் இடம்பெற்றுள்ள “நட்பே நட்பே” என்ற பாடலை சிம்புவும், இவரும் இணைந்து பாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டிலேயே நடிகர் தனுஷ் உடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில்..
இடம்பெற்ற “உன் மேலே ஆச தான்” என்ற சூப்பர் ஹிட் பாடலை தனுஷ், ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இணைந்து பாடி இருந்தனர். அதன் பிறகு ஐஸ்வர்யா ரஜினி திரை உலகில் எந்த ஒரு பாடலையும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.