சிம்புக்கு டாட்டா.. காட்டிவிட்டு பிரபல நடிகருடன் கைகோர்த்த ஐஸ்வர்யா ரஜினி.? வெளிவரும் குட் நியூஸ்.

aishwarya rajini
aishwarya rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் அவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமா உலகில் பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். அந்த வகையில் தனுசை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இந்த படத்தில் தனுஷுடன் கைகோர்த்து சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடித்திருந்தனர். முதல் படமே சூப்பர்ஹிட் படமாக மாறியது அதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கி சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில்பின் படங்களை இயக்கவில்லை.

அப்படியே ஓடிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா திடீரென 18 வருடங்களாக தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்த இவர் திடீரென ஜனவரி மாதம் பிரிய போவதாக விவாகரத்து செய்தியை அறிவித்தார். இந்த பரபரப்பு செய்திகள் பல வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் முசாபிர் என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

அதை தொடர்ந்து சிம்புவை வைத்து படம் இயக்குவார் என பல்வேறு தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் அவர்களை சந்தித்து உள்ளார். திடீர் சந்திப்பின் பொழுது பல விஷயங்கள் பேசப்பட்டன மேலும் இருவரும் சந்தித்த புகைப்படங்களும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியே பகிர்ந்தது இப்படி இருக்கின்ற நிலையில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. ]

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் பேசுகையில் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை பாச உணர்வில் சந்தித்தும் தொழில்ரீதியான சந்திப்பாக இது அமைந்தது இந்த சந்திப்பில் ஒரு நல்ல விஷயம் நடந்து உள்ளது அதை சரியாக ஒரு வாரத்தில் அறிவிப்பார் என ராகவாலாரன்ஸ் கூறி உள்ளார். அப்படிப்பட்ட செய்தி என்றால் நிச்சயம் ராகவா லாரன்ஸ்ஸை வைத்து படம் இயக்க உள்ளார் என ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.