கட்டிபிடித்து மணமக்களை வாழ்த்திய ஐஸ்வர்யா ரஜினி.! புகைப்படம் உள்ளே..

GAWDHAM KARTHIK
GAWDHAM KARTHIK

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சுமா மோகன் இருவருக்கும் நேற்று மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெற்றது இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சரியான பொருத்தமான ஜோடி என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அதில் திருமண பெண்ணை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிய புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் தான் கௌதம் கார்த்திக் வாரிசு நடிகராக அறிமுகமான கௌதம் கார்த்திக் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இருந்தாலும் இவருக்கென தனி ஒரு அந்தஸ்து கிடைக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிரபல நடிகை மஞ்சுமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்று உள்ளது அந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு இவர்களுக்க திருமண வாழ்த்துக்களை கூறியுள்ளார்கள் .

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் திருமண ஜோடிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது சரியான திருமணம்.. சரியான பொருத்தம்.. சரியான புன்னகையுடன் கூடிய அணைப்பு..

நீங்கள் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டிருக்கும் பொழுது மணமகன் மற்றும் மணமகள் மகிழ்ச்சியை பார்ப்பதே ஒரு தனி மகிழ்ச்சி எனது அன்பான கௌதம் ராம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இவ்வளவு எளிமையாகவும், முதிர்சியோடும் தொடங்கியிருக்கும் இந்த அழகான பயணத்தின் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.